அதிமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்..! வாய்ப்பு அளித்த முதல்வர்..! சபாநாயகர் முடிவு..?
தமிழக சட்டபேரவையில் ஐந்தாம் நாள் கூட்ட தொடர் இன்று நடைபெற்றது. அதில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கள்ளச்சாரயம் விவகாரம் குறித்து பேச அனுமதி கோரி தொடர் அமளியில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பினர்.
அதனையடுத்து சபாநாயகர் அப்பாவு பேசியதாவது, சட்டமன்ற உறுப்பினர்கள் அவை மாண்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டும் எனவும் கேள்வி நேரம் முடிந்ததும் பேச வாய்பளிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். அதனை அதிமுகவினர் ஏற்க மறுத்ததுடன் கோஷங்கள் எழுப்பி கூச்சலிட்டனர்.
அப்போது, சபாநாயகர் குறுகிட்டு, இது ஒன்றும் பொது கூட்டம் கிடையாது. கூச்சலிடாமல் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும் எனவும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை பேரவையிலிருந்து உடனே வெளியேற வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து, அமைச்சர் கே.என். நேரு பேசுகையில், ”அதிமுகவினர் வேண்டுமென்றே திட்டமிட்டு இந்த சட்டப்பேரவைக்குள் பிரச்சனையை ஏற்படுத்துகிறார்கள் திமுகவின் வெற்றியை மறைப்பதற்காக ஒரு நாடகமாடுகிறார்கள். அதிமுக ஆட்சி காலத்தில் அவை தலைவர் எழுந்து பேச முற்படும் போது எங்களிடம் பேச கூட மாட்டார்கள். நீங்களாவது இவர்களைப் பார்த்து பேசுகிறீர்கள். அவர்கள் சொல்வதைக் கேட்டு நியாயமாக இந்த சபையை நடத்திக் கொண்டு இருக்கிறீர்கள்”.
இப்படி இருக்க ”நீங்கள் சொல்வதை எல்லாம் கேட்காமல் அவையில் குழப்பம் ஏற்படுத்தி வெளியேற முயற்சிக்கிறார்கள் . முதலமைச்சர் அழைத்த போதும் மீண்டும் அதே தவறை அதிமுகவினர் செய்கிறார்கள். அதிமுகவினர் இதற்கு முன் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த பலருக்கும் தெரியும்.
எள்முனை அளவு கூட அவர்களிடம் ஜனநாயகம் இருக்காது. இன்றைக்கு ஜனநாயகத்தோடு நடக்கின்ற இந்த அவையை அதிமுகவினர் கெடுக்க முயற்சிக்கிறார்கள். இந்த காரணத்தாலயே பேரவையின் அலுவலை நடைபெறாமல் இடைமறித்தும், பேரவையின் விதிகளுக்கு மாறாக அவையில் குந்தகம் செய்து வருவதாலும், பேரவை விதி 121 ( 2 ) ன் படி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை கூட்டத்தொடர் முழுவதுமாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை முன் மொழிவதாக அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
அவரை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ”கூட்டத்தொடர் முழுவதும் வேண்டாம் இன்று ஒரு நாள் மட்டும் போதும் மீண்டும் ஒரு வாய்ப்பு தர வேண்டும்” என கோரினார்.
அப்போது சபாநாயகர் அப்பாவு, ”அவைக்கு குந்தகம் விளைவித்ததால், கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்ய இருந்ததை முதல்வர் பெருந்தன்மையோடு ஒரு நாள் மட்டும் போதும் என கோரியதன் அடிப்படையில் இன்று ஒரு நாள் முழுவதும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவை நடவடிக்கையில் பங்கேற்க கூடாது” என்ற தீர்மானம் பேரவையில் நிறைவேற்றபட்டது.
இதையும் படிங்க :
ஐசியூவில் மதிகப்பட்டுள்ள அதிஷி..! உடல்நலம் குறித்து மருத்துவர்கள் சொன்னது..!
– லோகேஸ்வரி.வெ
















