சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனது அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஜே.சி.டி. பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில்…
1991 -ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜானகியின் ஏஜெண்டாக ஓ.பன்னீர் செல்வம் செய்யப்பட்டார். ஜெயலலிதாவுக்கு எதிராக செயல்பட்டார் என எடப்பாடி கூறுவது பொய். அவர் தவறான தகவல்களை பரப்பி வருகிறார் என்றார்.
என்ன நடந்துகொண்டு இருக்கிறது என்றும் தெரியவில்லை வரலாறும் தெரியவில்லை எடப்பாடி பழனிசாமிக்கு என்ற அவர் எடப்பாடிக்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது என்று சாடியுள்ளார். ஜூன்.23 ஆம் தேதி நடைபெற்ற பொது குழுவுக்கு பிறகு எடப்பாடி பேசுவது இந்த கட்சியை ஒருங்கிணைப்பதாக தெரியவில்லை. மேலும் அவர் செல்வதை தொண்டர்கள் ஏற்கவில்லை.
ஒரே குடும்பத்தின் பிடியில் இந்த கட்சி சென்று விட கூடாது என கூறி வந்தது போல், தற்போது 5 பணக்காரர்கள் கையில் அதிமுக சென்று விடக்கூடாது. முழுமையான விசாரணைக்கு பிறகு ஜூலை 11 ஆம் தேதி காலை முதல் மாலை வரை அதிமுக தலைமை அலுவலகத்தின் வெளியேயும் அந்த சாலையில் எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களை காவல் துறை வெளியிட்டால் மட்டுமே ஓ.பன்னீர் செல்வம் நிரபராதி என தெரியும்.
https://www.youtube.com/watch?v=qm90Q4nQppk
அதிமுகவில் கூட்டு தலைமையாக எல்லோரும் இருக்க வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பமாக இருக்கிறது, தொண்டர்களின் நிலைப்பாடாகவும் உள்ளது. பெரும் பணக்காரர்கள் சிலரால் இந்த கட்சி பாழ்பட்டு வருகிறது. அவர்கள் யார் என செல்ல விரும்பவில்லை. வருங்காலத்தில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இந்த கட்சி பீடு போட்டு வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார்.
மேலும் சசிகலா மற்றும் தினகரன் அதிமுகவில் இருப்பது கட்சியை பலப்படுத்தும் என ஓபிஎஸ் திடமாக நம்புவதாகவும் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்தார்.