மீண்டும் மணிப்பூரில் வெடித்த வன்முறை..!!
மணிப்பூரில் மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில், அம்மாநில முதல்வரின் வீட்டை முற்றுகையிட சிலர் முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடஒதுக்கீடு தொடர்பாக கடந்த மே மாதத்தில் இருந்து மோதல் நீடித்து வருகிறது. இது தொடர்பான வன்முறைகளில் 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்
இந்நிலையில், கடந்த 4 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இணைய சேவை கடந்த 23-ஆம் தேதி மீண்டும் வழங்கப்பட்டது. அப்போது ஜூலை மாதத்தில் காணாமல்போன மைதேயி சமூகத்தைச் சோந்த மாணவனும், மாணவியும் கடத்தி கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மாணவன் மாணவி கொல்லப்பட்டதற்க்கு நீதி கேட்டும், சக மாணவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனா்.
தடை உத்தரவுகளை மீறி, நேற்று மாலை இம்பாலில் உள்ள முதல்வர் பிரேன் சிங்கின் மூதாதையர் இல்லத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயன்றனர்.
பல்வேறு திசைகளில் இருந்தும் அந்த இடத்தில் கூட்டம் கூட முயன்றதால் கண்ணீர் புகை குண்டுகளை வீச போராட்டக்காரர்களை காவல்துறையினர் கலைத்தனர்.
இதனிடையே தெளபால் மாவட்டத்தில் மாணவர்கள் போராட்டம் நீடித்து வரும் நிலையில், அங்குள்ள பாஜக மண்டல அலுவலகத்துக்கு வன்முறை கும்பல் தீவைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..