மீண்டும் ஒரு பணமோசடி..!! பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி..!! சிக்கிய கும்பல்..!!
ஏலச்சீட்டு நடத்தி மோசடி பாதிக்கப்பட்டவர்களின் புகார்கள் பெயரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி.
ஏலச்சீட்டு மூலம் பணமோசடி செய்வது., அதிக வட்டி தருவாதாக ஆசை வார்த்தை கூறி மக்களை ஏமாற்றுவது., போன்ற பல குற்றங்கள் தொடர்ந்து நடந்துக்கொண்டு இருந்தாலும் ஒரு சில மக்கள் அதை வெறும் செய்தி என்று எடுத்துக்கொண்டு மீண்டும் அந்த பணமோசடி கும்பலிடம் சிக்கிக்கொள்கிறார்கள்., அப்படி ஒரு சம்பவம் தான் இங்கே நிகழ்ந்துள்ளது..
திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவர் வசிக்கும் அதே பகுதியில் உள்ள மக்களிடையே ஏல சீட்டு நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஏல சீட்டு முதிர்வடைந்த பின்னரும் ஏலச் சீட்டு பணம் கட்டியவர்களுக்கு பணம் தராமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த வகையில் இவர் நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் சுமார் ஒரு கோடி ரூபாய் பணம் மோசடி செய்ததாக இவரிடம் சீட்டு கட்டிய அப்பகுதி மக்கள் திருவண்ணாமலை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். புகார் குறித்து விசாரணை மேற்கொண்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மகேந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தின் நேர் நிறுத்தி, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..