தேர்தல் வெளியானதம் பறக்கும் படை செய்த அதிரடி..!! அடேயப்பா இவ்ளோ கோடியா..?
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் 702 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.
ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு 3 பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவினர் என்ற அடிப்படையில் கண்காணிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
முதல் நாளான இன்று சேப்பாக்கம் மற்றும் சென்னை காமராஜர் சாலையில் மூன்று பறக்கும் படை வாகனங்களும், ஒரு நிலையான கண்காணிப்பு அதிகாரி மற்றும் காவல் ஆய்வாளர் தலைமையில் சோதனைகள் நடைபெற்றது
இந்நிலையில் சென்னையில் நடைப்பெற்ற சோதனையில், இன்று மட்டும் 1.43 கோடி பணத்தை பறிமுதல் செய்யப்பட்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..