பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் தொடர்புடைய 50 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடந்து வருகிறது.
கடந்த ஜீன் மாதம் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை ஜி ஸ்கொயர் நிறுவனத்தை முன்னேற்ற கழகமாக சென்னையிலுள்ள சிஎம்டிஏ மாறியுள்ளதாகவும், இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் இயக்குநர்களாக உள்ளதாகவும் குற்றச்சாட்டி இருந்தார்.
பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் சேத்துப்பட்டு, ஆழ்வார்பேட்டை அலுவலகங்களிலும் கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.