முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு..
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை டிசம்பர் 8- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, அவர் மீது 10 ஆயிரம் பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கையினை தருமபுரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.
இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை கடந்த 6-ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்று 2-வது முறையாக கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, உள்ளிட்ட 11 பேரும் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரானர்.
அவர்களிடம் சில கேள்விகளை கேட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை டிசம்பர் 8- ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
