கருப்பு மாஸ்க் அணிந்து பேரவை நடவடிக்கைகளில் கலந்து கொண்டுள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. தினந்தோறும் சட்டசபை கூட்டம் தொடங்கியதும், கேள்வி நேரம் நடைபெறும் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளிப்பார்கள். இதனை தொடர்ந்து நேரமில்லா நேரத்தில் தமிழகத்தில் முக்கிய பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு முதலமைச்சர் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் பதில் வழங்குவார்கள்.
இந்தநிலையில் திமுகவினர் தேர்தல் வாக்குறுதிப்படி தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் மற்றும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் பதிலுரை ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்களோ, எதிர்க்கட்சி தலைவரோ பேசுவது ஒளிபரப்பப்படவில்லை என்பது நேற்றைய கூட்டத்தில் பெரும் விவாதமாக கிளப்பியது.
இதுகுறித்து நேற்று கேள்வி எழுப்பிய அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுகவின் இந்த போக்கை கண்டித்து வெளிநடப்பு செய்வதாகவும் அறிவித்தார். இந்நிலையில் மக்கள் பிரச்சனைகளை சட்ட மன்றத்தில் பேச அனுமதி மறுப்பதாக கூறி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு மாஸ்க் அணிந்து பேரவை நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளனர்.
Discussion about this post