சூப்பராக வேலை செய்த ஆதித்யா எல்-1..! சூரிய புயலை கச்சிதமாக க்ளிக்..!
சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2ம் தேதி “ஆதித்யா எல்-1” என்ற விண்கலத்தை அனுப்பி வைத்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் “ஆதித்யா எல்-1” விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
பூமியில் இருந்து புறப்பட்ட 1 மணி நேரம் 3 நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்து “ஆதித்யா எல்1” விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து சென்று புவிவட்டப்பாதையில் தனது பயணத்தை தொடங்கியது. விண்கலத்தின் சுற்றுவட்டபாதை படிப்படியாக உயர்த்தப்பட்டு வருவதாக இஸ்ரோ அறிவித்தது.
அதனை அடுத்து “ஆதித்யா எல்-1” விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இஸ்ரோ கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7ம் தேதி வெளியிட்டது. அதில் விண்கலத்தின் VELC மற்றும் SUIT கருவிகளின் புகைப்படம், நிலா மற்றும் பூமியின் புகைப்படம் ஆகியவை இடம்பெற்றது.
அது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘சூரியனை நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டு வரும் “ஆதித்யா எல்-1” விண்கலம், நிலா மற்றும் பூமியை செல்பி புகைப்படம் எடுத்துள்ளது என்று பதிவிடப்பட்டது.
தற்போது பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் ஆதித்யா பயணித்து கொண்டிருந்த நிலையில் கடந்த மே மாதம் ஆதித்யா எல்-1 சில புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சீற்றத்துடன் கூடிய சூரியன் படங்கள் குறித்து இஸ்ரோ அதிகாரிகள் கூறுகையில், “ஆதித்யா எல்-1” ல் மிகவும் சக்தி வாய்ந்த எஸ்.யூ.ஐ.டி. தொலை நோக்கி சூரியனின் அல்ட்ரா வயலட் புகைப்படத்தை எடுத்துள்ளது. என்றும் எக்ஸ் மற்றும் எம் கதிர்கள் உள்ளிட்ட பல்வேறு கதிர்கள் குறித்த விபரங்களும் நமக்கு கிடைத்துள்ளன என்றும் தெரிவித்துள்ளனர்.
மே மாதம் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் பூமியில் காந்த கதிர் வீச்சு ஏற்பட்டதையும் மே 11ல் அனுப்பிய புகைப்படத்தில் தெளிவாக பதிவாகியுள்ளது‘ என்றனர். அது மட்டும் இன்றி ஆதித்யா எல்-1 எடுத்த புகைப்படங்கள் மற்றும் அதன் விபரங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
-லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..