ஆடி பௌர்ணமி.. திருச்செந்தூரில் திரலாக குவியும் பக்தர்கள்..!
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள முருக பெருமானின் ஆறுபடை வீடுகளினன் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக பௌர்ணமி நாட்களில் கோயில் கடற்கரையில் தங்கி சுவாமி தரிசனம் செய்தால் வேண்டுதல் நிறைவேறும் என மக்கள் நம்புவதால் கடந்த சில மாதங்களாக பௌர்ணமி தினங்களன்று பக்தர்களின் கூட்டம் அலைமோதும். மேலும் அன்றைய நாளில் குடும்பமாக கடற்கரையில் தங்கியிருந்து பரிகார பூஜைகள் செய்து, வழிபாடு நடத்துகின்றனர்.
இந்தநிலையில் நாளை ஆடி பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் இன்றைக்கே கோயிலுக்கு படையெடுக்க தொடங்கினர். இதற்காக கோயிலில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுபாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களின் வசதிக்காக கூட்ட நெரிச்சலை கட்டுப்படுத்த கூடுதலாக தடுப்புகள் அமைக்கப்பட்டு சிரமமின்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வழிவகைசெய்துள்ளது.
-பவானி கார்த்திக்