மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை பிரதமர் மோடி வழிநடத்துகிறாரா..??
மிரட்டி பணம் பறிக்கும் மிகப்பெரிய கும்பலை பிரதமர் மோடி வழிநடத்தி வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மராட்டிய மாநிலத்தில் உள்ள தானேயில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராகுல் காந்தி, தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக திரட்டிய நிதி, அரசியல் கட்சிகளை பிளவுபடுத்த பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசுகளை கவிழ்க்கவும் தேர்தல் பத்திர நிதியை பாஜக பயன்படுத்தியதாகவும், என்றாவது ஒருநாள் பாஜக அரசு அகற்றப்பட்டு, அவர்களின் பேச்சை கேட்டு செயல்பட்ட அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள் என ராகுல் காந்தி தெரிவித்தார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.