சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் சுதாகரின் தந்தை ஹெல்மெட் அணியாமல் இருந்ததால் தான் என் தந்தையை இழந்ததாக தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள ஸ்பென்சர் சிக்னல் அருகே போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் வழங்கும் நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் கூறியது
காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது மகிழ்ச்சி அடைந்தார் என்றும் கண்டிப்பாக வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும்
சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறக் கூடாது அது தான்
போக்குவரத்து போலீசாரின் கனவு.
இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களின் ஹெல்மெட் அணிவது எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும்
இருப்பினும் 100 பேரில் 2 அல்லது 3 நபர்கள் ஹெல்மெட் அணியாமல் இருக்கின்றனர் என்பது குறித்தும் அனைத்துமே கண்காணிப்பு கேம்ரா பதிவு செய்து வருவதாகவும்
சாலை விபத்தின் வலி என்பது எனக்கு நன்றாக தெரியும் ஏனென்றால் நான் என்னுடைய தந்தையை இழந்தது சாலை விபத்தில் தான் அதனால் விபத்து பற்றிய வலி எனக்கு தெரியும் என கண்கலங்க வைத்துள்ளதாகவும்
சமூக வலைதளங்களில் காவல்துறையினரும் ஹெல்மெட் அணியாமல் இருப்பதை காண முடிகிறது. இனி வரும் காலங்களில் போலீசார் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் இல்லையென்றால் அதற்கேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்