சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் கொடுத்த நிலையில், நடிகை மீரா மிதுனை மீண்டும் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
பட்டியலினத்தோர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாததால் நடிகை மீரா மிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து மத்திய குற்றப்பிரிவு முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
மேலும் மீரா மிதுனை கைது செய்து ஏப்ரல் 4ம் தேதி ஆஜர்படுத்த ,மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், நடிகை மீரா மிதுனை மீண்டும் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். ஜாமீனில் வெளியே வந்த நடிகை மீரா மிதுன் விசாரணைக்கு ஆஜராகாததால் நேற்று முன்தினம் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு இன்று(மார்ச்.25) அவர் கைது செய்யப்பட்டார்.