நடிகை ஹீரா சென்னையை சேர்ந்தவர். இதயம் என்ற படத்தில் அறிமுகமானவர். நடிகர் அஜித்குமாருடன் சில படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ஹீராவின் வலைப்பக்கத்தில் அவர் ஒரு பதிவை போட்டதாக சொல்லி சில தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவ தொடங்கின. அதாவது அந்த பதிவில் ஹீரா கூறியுள்ளதாவது, தன் மீது இளம் வயதில் திட்டமிட்டு சுமத்தப்பட்ட பழிகளால் மன உளைச்சலுக்கு ஆளானேன். நான் ஒரு நடிகரை பல வருடங்களாக காதலித்தேன். ஆனால் அவரோ நான் ஏமாற்றுக்காரி, போதைக்கு அடிமையாகிவிட்டேன் என்றெல்லாம் பொய் கூறி அவமானப்படுத்தினார். அவருக்கு முதுகில் அறுவை சிகிச்சை செய்திருந்தபோது அவருக்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும் இருந்தேன்.
அந்த நடிகர் படுத்த படுக்கையாக இருந்தபோது அவரை எல்லாமுமாக இருந்து நான் பார்த்துக் கொண்டேன். ஆடை உள்ளிட்டவைகளையெல்லாம் மாற்றினேன். ஆனால் , குணமடைந்த பிறகு, அவர் என்னை ஏமாற்றினார். என்னுடைய கௌரவம், நேர்மை மீது அவர் தனிப்பட்ட ரீதியான தாக்குதல்களை நடத்தினார். இதுவெல்லாம் என்னை மன வேதனைக்கு உள்ளாக்கியது. இதனால், க தற்கொலைக்கும் முயன்றுள்ளேன்.
என்னுடனான உறவை எந்தவிதமான கவலையும் கொள்ளாமல் பிரேக் அப் செய்தார். அதனையடுத்து ஒரு ஸ்டூடியோவில் அவரை சந்தித்தபோது ரொம்பவே அழுதேன். ஆனால் அவரோ, ‘வேலைக்காரி போல் இருக்கும் ஒருவரை திருமணம் செய்துகொள்வேன். எனக்கு யார் வேண்டுமோ அவர்களுடன் சென்று என்னால் இருக்க முடியும்’ என்று ஆணவமாக கூறினார் என்று சொல்லப்பட்டிருந்தது.
ஹீராவின் இந்த பதிவுகள் வெளியான சில மணி நேரத்திலேயே அவரது வலைதள பக்கம் முடக்கப்பட்டது. மேலும் ஹீரா நடிகர் அஜித் குமாரை காதலித்தார் என்பது அனைவருக்குமே தெரியும்; அதேபோல் அஜித்துக்குத்தான் முதுகில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டிருக்கிறது.
எனவே ஹீரா குறிப்பிடும் அந்த நடிகர் அஜித்தாகத்தான் இருப்பாரோ ? என்று பலரும் கூறி வருகின்றனர். அதேசமயம் அந்த வலைப்பக்கமே ஒரு போலியான வலைப்பக்கம். நேற்று அஜித் பத்மபூஷன் விருதினை பெற்றார். எனவே அவருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சிலர் வேண்டுமென்றே இந்த பக்கத்தை உருவாக்கி பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
நடிகை ஹீரா முதலில் சினிமாவில் நடிக்க விருப்பமில்லாமல்தான் இருந்தார். கடந்த 1991ஆம் ஆண்டு இயக்குநர் கதிர் இதயம் படத்தின் கதையை சொல்லி ஹீராவை கன்வின்ஸ் செய்தார். அந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்தது. தயாரிப்பாளர் தியாகராஜன் திரையுலகில் கட் அண்டு ரைட்டா இருப்பாரு. சொல்ற சம்பளத்தை சரியாக கொடுத்திடுவார். அதேபோல, சரியா கால்ஷீட்டுக்கு வரனும்னு நினைப்பார். தியாகராஜனும் ஹீராவை பார்த்து நடிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதையடுத்தே, ஹீரா இதயம் படத்தில் நடிக்க முடிவு செய்தார்.
சரத்குமாருடன் ஹீரா நடித்த போது, அவர் காதலில் விழுந்துள்ளர். ,ஒரு கட்டத்தில் ஹீராவை கட்டுப்படுத்த ஆரம்பிச்சாரு. இது பிடிக்காமல், அவரை விட்டு ஹீரா விலகி போனதாகவும் தகவல்கள் உண்டு. அப்புறம் தொடரும் படத்தில் இருந்து அஜித்குமாருக்கும் ஹீராவுக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது. ஹீராவை திருமணம் செய்ய போவதாக அஜித்குமார் பெற்றோரிடத்தில் கூறியதும் வீட்டில் பிரச்னை ஏற்பட்டது. இப்போதுதான், நீ வளர்ந்துட்டு இருக்கிறாய், அதுக்குள்ள கல்யாணம் அப்படி இப்படினு போனா, மார்க்கெட் போயிடும்னு கூறி வீட்டில் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, அஜித்தின் பெற்றோர், ஒரு பெரிய தயாரிப்பாளரிடம் கூறி ஹீராவை எச்சரிக்க கூறியுள்ளனர். அந்த தயாரிப்பாளரும் அந்த பையனோட வாழ்க்கையில் விளையாடாதே என்று கூறி ஹீராவை எச்சரித்துள்ளார். இதையடுத்து, ஹீரா தமிழ் சினிமாவை விட்டு காணாதமல் போனார். நடிகை ஹீரா பல மொழிகள்ள கிட்டத்தட்ட 49 படங்கள் பண்ணிருந்தாங்க. இப்போது, 49 வயதாகிறது. இப்போதும், அவர் சிங்கிளா தான் வாழ்கிறார்.