சோட்டானிக்கரா பகவதி அம்மன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம்ரவி வழிபாடு நடத்திய பின்னணி என்ன?
சமீபத்தில் நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிந்தார். அதற்கு பிறகு, பல்வேறு வதந்திகள் அவரை பற்றி பரவி வந்தன. எனினும், அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக தற்போது, அவர் அமைதியாக வாழ்ந்து வருகிறார். தற்போது, படங்களில் தீவிரமாக நடித்தும் வருகிறார்.ஜெயம் ரவி என்ற தனது பெயரை ரவி மோகன் என்றும் மாற்றிக் கொண்டார்.
இந்த நிலையில், நடிகர் ரவி மோகன் நடிகர் கார்ர்த்தியுடன் சேர்ந்து கேரளாவிலுள்ள கோவில்களில் ஆன்மீக பயணம் மேற்கொண்டு வருகின்றனர். கேரளாவிலுள்ள சோட்டானிக்கரா பகவதி அம்மன் கோவிலில் நேற்று சென்று வழிபாடு நடத்தினார். அங்கு, அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், பகவதி அம்மனை தரிசித்து அவர்கள் மகிழ்ந்தனர்.
இது குறித்து நடிகர் ரவி மோகன் கூறுகையில், ‘ஒவ்வொரு ஆண்டும் சபரிமலைக்கு மகரவிளக்கு நேரத்தில் செல்வது வழக்கமானது. ஆனால், இந்த முறை மகர விளக்கு காலத்தில் செல்ல முடியவில்லை. அதனால் , விஷூ கனி காலத்தில் நானும் கார்த்தியும் சபரிமலை சென்றோம். பின்னர், சோட்டானிக்கரா அம்மன் கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்தினோ.. 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோவிலுக்கு மீண்டும் வந்துள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் கார்த்தி கூறுகையில், நான் சரிமலை சென்றது இதுதான் முதல்முறை. அதுவும், ஜெயம் ரவியுடன் சென்ற நல்ல அனுபவமாக இருந்தது என்றார்.
சோட்டானிக்கரா பகவதி அம்மன் கோவில் எர்ணாகுளத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.