விசிக தலைவர் திருமாவளவன் எம்பிக்கு நடிகர் விஜய் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தனது 61 வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். திருமாவளவன் எம்பி தனது பிறந்தநாளை முன்னிட்டு கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திருமாவளவனின் பிறந்தநாளை விசிகவினர் அரசியல் எழுச்சி நாளாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடினர். அவரது பிறந்தநாளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் நேரிலும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் விசிக தலைவர் திருமாவளவனுக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் திருமாவளவன் எம்பி தெரிவித்ததாவது..
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விஜய் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்! pic.twitter.com/DnpQeb20jy
— Thol. Thirumavalavan (@thirumaofficial) August 17, 2023
“பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விஜய் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!” என தெரிவித்துள்ளார்.