பேனர் வைக்க கூடாது என ரசிகர்களுக்கு உத்தரவிட்ட நடிகர் விஜய்..!! ஏன் தெரியுமா..?
நடிகர் விஜய் திரைப்படத்தில் மட்டுமின்றி மக்களுக்கும் உதவி செய்வதில் ஈடுபாடு உள்ளவர். அதற்காகவே அவர் விஜய் மக்கள் இயக்கம், என்ற ஒன்றை தொடங்கி அதன் மூலம் அனைவருக்கும் உதவி செய்து வருகிறார்.
ஆனால் இந்த உதவிகள் எல்லாம்.., கட்சி தொடங்குவதற்காக தான் என்று ஒரு சிலர் கூறுகின்றனர். அவரின் 70-வது படத்தை முடித்த பின் படத்தை தொடங்கி விடுவார் என்றும்.., அதற்கான செயல்களை தான் விஜய் மக்கள் இயக்கம் நடத்தி வருகிறது எனவும், சில முக்கிய பிரமுகர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை விஜய் சந்திக்கப் போவதாக கூறியிருந்தார். அதன் படி 1500 மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். இந்த 1500 மாணவர்களுக்கும், நடிகர் விஜய் ஊக்க தொகை வழங்கப்போவதாகவும், தெரிவித்திருக்கிறார்.
![]()
இந்த விழா சனிக்கிழமை காலை 9மணிக்கு தொடங்க இருப்பதாகவும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் காலை 7:45 மணிக்கு அனுமதிக்கப் படுவதாகவும், வரும் அனைவருக்கும் நடிகர் விஜய் உணவு விருந்து அளிக்கப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்க தொகை வழங்கும் விழாவிற்கு எனக்கென்று பேனர், கட்அவுட் எதுவும் வைக்க கூடாது என்று, “நடிகர் விஜய்” ரசிகர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தலைவரின் வார்த்தைக்கு கட்டுப்பட்ட ரசிகர்களும், பேனர் மற்றும் கட்அவுட் வைப்பதை தவிர்த்துள்ளனர்.

















