ஜவான் திரைப்படத்திற்கு நடிகர் விஜய் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அட்லீ இயக்கத்தில் வெளியான திரைப்படம் “ஜவான்” இதில் ஷாருகான், விஜய்சேதுபதி, யோகிபாபு, ப்ரியாமணி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்தப் படம் ஆயிரம் கோடி வசூலை பெற்று சாதனைப் படைத்து வரும் நிலையில், அனைத்து தரப்பினரும் ஜவான் படக்குழுவினருக்கும் நடிகர் ஹாருக்கானுக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், விஜய் ரசிகர் ஒருவர் நடிகர் ஷாருக்கானுக்கு ஜவான் திரைப்பட வாழ்த்துக்களை டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அதற்கு பதில் அளித்து நன்றி தெரிவித்த விஜய்யின் லியோ படத்திற்காக காத்திருக்கிறேன் என டிவீட் செய்துள்ளார்.
பின்னர் ஷாருக்கான் போட்ட டிவீட்டிற்கு பதிலளித்த விஜய், ‘ஷாருக்கான், அட்லி மற்றும் ‘ஜவான்’ படக்குழுவுக்கு வாழ்த்துகள். லவ் யூ டூ ஷாருக் சார்’ எனக் கூறியுள்ளார்.
Congratulations on the blockbuster @iamsrk, @Atlee_dir and the entire #Jawan team!
Love you too @iamsrk sir https://t.co/yq5T2BOhz8
— Vijay (@actorvijay) September 27, 2023