இயக்குனர் சித்திக் மறைவிற்கு நடிகர் விஜய் வருத்தம் தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
தமிழில் பிரெண்ட்ஸ், எங்கள் அண்ணா, காவலன், பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய படங்களை இயக்கியவர் சித்திக். நடிகர் லாலுடன் இணைந்து சித்திக் – லால் என்ற பெயரில் ஏராளமான படங்களை இயக்கியிருக்கிறார். இந்த நிலையில் இயக்குநர் சித்திக் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவரது மறைவு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
நடிகர் விஜய்யை வைத்து பிரெண்ட்ஸ், காவலன் என இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் சித்திக். இந்த நிலையில் நடிகர் விஜய் இன்று இயக்குநர் சித்திக்கின் குடும்பத்தினருக்கு தொலைபேசி வாயிலாக அழைத்து இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் வெளிநாட்டில் இருப்பதால் சித்திக்கின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள முடியவில்லை என வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
Discussion about this post