நடிகர் ஷாருக்கான் புதிதாக ஓடிடி தளம் தொடங்கவுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்திய திரைத்துறையில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ஷாருக்கான் தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கிறார். தற்போது இவர் இயக்குநர் அட்லீ இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் தங்களது படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை ஓடிடி தளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
அதன்படி, தெலுங்கு முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் தனது குடும்பத்தின் பெயரில் ஆஹா என்ற ஓடிடி தளத்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், நடிகர் ஷாருக்கான் புதிதாக ஓடிடி தளம் தொடங்கவுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
SRK+ என்ற பெயரில் அவர் இந்த தளத்தை தொடங்கவுள்ளார். இதற்கு சல்மான் கான், கரண் ஜோஹர், அனுராக் காஷ்யப் மாதிரியானவர்கள் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.