உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்க இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.! எதற்கு தெரியுமா..?
உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை நடிகர் ரஜினிகாந்த் இன்று இரவு 7 மணிக்கு சந்திக்க போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இமயமலை பயணத்தை முடித்து விட்டு லக்னோ சென்ற நடிகர் ரஜினிகாந்த், உ.பி.துணை முதல்வர் கேஷவ் பிரசாத் “மவுர்யாவுடன்” இன்று பகல் 1.30 மணிக்கு ஜெயிலர் படம் பார்க்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ரஜினிகாந்த் தனது ஜெயிலர் படத்தையும் முதல்வர் யோகியுடன் சேர்ந்து படம் பார்க்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. லக்னோ விமான நிலையம் வந்து இறங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினி காந்த இதுகுறித்து பேசினார். தனது ஜெயிலர் படத்தைப் பார்க்க முதல்வர் யோகியுடன் லக்னோ வந்திருப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு உத்தரகாண்ட் சென்ற நடிகர் ரஜினிகாந்த் இமயமலை சென்ற பொழுது.., அங்குள்ள பல கோவில் மற்றும் ஆசிரம்பங்களுக்கு சென்று கடவுளை சந்தித்து அங்கிருந்து ஜார்கண்ட் சென்று ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.