மலையாள நடிகைகளின் பாலியல் புகார் … கருத்து வெளியிட்ட நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன்..!
மலையாள திரைத்துறையில் நடிகைகளுக்கு இயக்குநர்களும், நடிகர்களும் பாலியல் தொல்லை அளிப்பதாக ஹேமா கமிட்டி அளித்த அறிக்கை விவரங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அறிக்கை வெளியானதற்கு பின் பல நடிகைகள் தாமாக முன்வந்து தங்களும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக கூறிவருகின்றனர். சமீபத்தில் நடிகை ரேவதி சம்பத், நடிகர்கள் சித்திக் மற்றும் ரியாஸ் கான் இருவரும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டினார். தொடர்ந்து பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா மலையாள இயக்குநர் ரஞ்சித் மீது குற்றம் சாட்டினார்.
இப்படி முன்னணி திரைக் கலைஞர்கள் மீது அடுத்தடுத்து வைக்கப்படும் பாலியல் குற்றச்சாட்டுகளால் மலையாள திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் இதுதொடர்பாக மோகன்லால், மம்முட்டி உள்ளிட்ட முன்னனி நடிகர்கள் எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்ததை தொடர்ந்து, முதல்முறையாக நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் இது தொடர்பாக பேசியுள்ளார்.
அதாவது, ” நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரத்தில் நடிகர் சங்கமான அம்மாவிடமிருந்து வலுவான தலையீடு மற்றும் நடவடிக்கைகள் வேண்டும். புகார்கள் உண்மை என்பது நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும். அதே நேரத்தில் யாராவது தவறாக புகார்களை கூறியிருந்தாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
-பவானி கார்த்திக்