நடிகர் டெல்லி கணேஷ் மறைவு..!! முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும்., மூத்த நடிக்கருமான டெல்லி கணேஷ் (வயது 80) வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவின் காரணமாக இன்று அதிகாலை காலமானார்.
சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் அவர் உயிர் பிரிந்த நிலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது..
இந்த செய்தியை அறிந்த பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் தமிழக துணை முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்..
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது.,
“மூத்த நடிகர் டெல்லி கணேஷ் அவர்கள் மறைந்த செய்தியை கேட்டு மிகவும் வேதனையடைந்தேன்.
அவரது பிரிவால் வாடும் குடும்பத்தார்க்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை” தெரிவித்துக்கொள்கிறேன் என இவ்வாறே அவர் பதிவிட்டுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..