நடிகர் சாருஹாசன் மருத்துவமனையில் அனுமதி..!! உடல் நலம் குறித்து சுஹாசினி விளக்கம்..!!
நடிகர் கமல்ஹாசனின் மூத்த அண்ணன் சாருஹாசன் . இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி கன்னடம் போன்ற மொழிகளில் பல படங்கள் நடித்துள்ளார்.
பாலுமகேந்திரன் இயக்கத்தில் 1979-ம் ஆண்டு வெளியான “உதிரிப்பூக்கள்” படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சாருஹாசன். தளபதி, விக்ரம், ஜெய்ஹிந்த் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தீபாவளிக்கு முந்தைய நாள் இரவில் கீழே விழுந்ததாகவும் அதன் பிறகு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் அறுவை சிகிச்சையும் நடந்து முடிந்துள்ளது.
அறுவை சிகிச்சை நடப்பதற்கு முன்பாக நடிகை சுஹாசினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் சாருஹாசனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் சாருஹாசன் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டி பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
கவிப்பிரியா.