ஏஜென்சி செய்த செயல்…!! நெகிழ்ச்சியில் விவசாயிகள்..!!
இயல்பாகவே ஆசைகள் என்பது எல்லோருக்கும் இருக்கும் அதிலும் விமானத்தில் செல்ல வேண்டும் என்ற ஆசை சாமானியர்கள் பலருக்கும் இருக்கும்., அப்படியாக விமானத்தில் செல்ல வேண்டும் என ஆசைப்பட்ட விவசாயிகளின் கனவை பிருந்தா ஏஜென்சி நிறைவேற்றியுள்ளது..
இதுகுறித்து பிருந்தா ஏஜென்சி உரிமையாளார் அவரை தொடர்பு கேட்ட போது., தன்னிடம் உரம் வாங்க வரும் விவசாயிகளுடன் நட்போடு பேசி பழகுவது வழக்கம் அப்படியாக நான் சந்தித்த விவசாயிகளில் கனவோடும்., தன்னிடம் ஆசைகளை பகிர்ந்து கொண்ட அவர்களது கனவை நிறைவேற்றி பார்க்க வேண்டுமென ஆசை..
அவர்களது பெரிதான ஆசை பல இருந்தாலும் தன்னிடம் உரம் வாங்கும் 100 விவசாயிகளின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி பார்க்க ஆசைப்பட்டேன். அதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சென்று அங்கு ஸ்பிக் உர நிறுவனத்தை சுற்றி பார்க்க அழைத்து செல்வதாக தெரிவித்தார்..
ஸ்பிக் உர நிறுவனத்திடம் இருந்து உரத்தை இறக்குமதி செய்து 21 கிராமங்களுக்கு பிருந்தா ஏஜென்சி விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது..
ஸ்பிக் உர நிறுவனத்தை சுற்றி பார்க்க செல்வதற்கு ஏஜென்சியே இலவசமாக அழைத்து செல்வது விவசாயிகளிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..