ஏர் இந்தியா எடுத்த அதிரடி முடிவு..!! 30 பணியாளர்கள்..!
ஒரே நாளில் விடுப்பு எடுத்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (air-india-expres) பணியாளர்கள் 30 பேரை அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஊழியர்கள் விடுப்பு :
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தில் பணியாற்றி வரும் 200-க்கு மேற்பட்ட ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவில் இருந்து திடீரென உடல்நலக்குறைவு விடுப்பு எடுத்து போராட்டத்தில் இறங்கினர்.
விமான நிறுவனத்தின் தவறான நிர்வாகத்தை கண்டித்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் ஏர்-இந்தியா விமான சேவை திடீரென நிறுத்தப்பட்டதால் மாற்று விமானம் வரவழைக்கப்பட்டு பயணிகள் சென்றனர்.
ஊழியர்கள் பணி நீக்கம் :
இதனால் நாடு முழுவதும் 80-க்கு மேற்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஒரே நாளில் எடுத்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பணியாளர்கள் 25 பேரை அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
விமானிகள் வேலை நிறுத்தம் காரணமாக விமானிகள் பற்றாக்குறை சமாளிக்கும் விதமாக அடுத்த சில நாள்களுக்கு ஏா் இந்தியா, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸின் விமானங்கள் சேவை குறைக்கப்படுவதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி அலோக் சிங் தெரிவித்துள்ளார்.