சென்னையில் துணிவு திரைப்படம் பார்க்க சென்ற 19 வயது இளைஞர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நடிகர்கள் அஜித், விஜய் மற்றும் திரையரங்கு உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்ககோரி சமூக ஆர்வலர் புகார் அளித்துள்ளார்.
சென்னை மாநகர காவல் ஆணையரக அலுவலகத்திற்கு இணைய வழியாக சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம் என்பவர் புகார் அளித்துள்ளார். அதில், உயிரிழந்த ரசிகர் குடும்பத்திற்கு அஜித் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தலா 1 கோடி ரூபாய் வழங்க வேண்டுன் என்றும், பிளக்ஸ், கட் அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்தது மற்றும் இளைஞர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நடிகர்கள் அஜித், விஜய் மற்றும் திரையரங்கு உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்
Discussion about this post