கோட் திரைப்படத்திற்காக விஜய் மக்கள் இயக்கம் செய்த செயல்…!
தளபதி விஜய் நடிப்பில் உலகம் முழுவதும் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் திரைப்படம் கோட். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மேலும் இப்படத்தில் பிரஷாந்த், அஜ்மல், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, யோகி பாபு என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
இந்தநிலையில் நடிகர் விஜய் இப்படம் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை அவரது ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் கூறியிருந்தார். அதாவது கோட் திரைப்பட கொண்டாட்டத்தின் போது அவரது கட்சி கொடி மற்றும் கட்சி சின்னத்தை பயன்படுத்த கூடாது எனவும் பேனர்களுக்கு பால் அபிஷேகம் செய்யக்கூடாது என்று கூறியிருந்தார்.
அதன்படி கும்பக்கோணத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், கும்பகோணம் கார்த்திக் சினிமாஸ் திரையரங்கில் கோட் திரைப்படத்திற்கான சிறப்புக் காட்சிக்கு 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாக டிக்கெட் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.