”போராட்டம் கைவிடுங்கள்”.. மருத்துவர்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை..!
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள “ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் , பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பணியாற்றி வந்தார். இந்த பெண் பயிற்சி மருத்துவர் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி இரவுநேர பணியில் இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்யபட்டு தலை., கை கால்களில் அடித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
இந்த சம்பவம், அந்த மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் மத்தியில், பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால், தனியார் மற்றும் அரசு மருத்துவர்கள் ஒன்றிணைந்து, மிகப்பெரிய போராட்டத்தை அம்மாநிலத்தில் நடத்தி வருகின்றனர்.
கடந்த 14 நாட்களாக தொடர்ந்துவரும் மருத்துவர்களின் இந்த போராட்டத்தால், ஏழை எளிய மக்கள், பெரும் அவதி அடைந்துள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ, இன்று தங்களது அறிக்கைகளை, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்த அறிக்கைகளை பதிவு செய்த நீதிபதி, ”போராட்டத்தை நடத்தி வரும் மருத்துவர்கள் அனைவரும், மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று கூறினார். மேலும், மருத்துவர்களின் போராட்டத்தால், மக்கள் பாதிக்கப்படுவதை கவனிக்காமல் இருக்க முடியாது” என்றும் அவர் கூறினார்.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”