ஆடி 4 ஆம் வெள்ளி.. ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் அம்மனுக்கு சந்தன காப்பு..!
வேலூர் மாவட்டம், வேலூர் டிட்டர் லைன் பகுதியில் உள்ள தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் தேவி கருமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்களை செய்து தீபாராதனைகள் நடந்தது இதில் திரளான பக்தர்கள் சுவாமிதரிசனம் செய்தனர்.
இதே போல் வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் உள்ள அகிலாண்டீஸ்வரி அம்மன் சன்னதியில் ஆடி 4 ஆம் வெள்ளியை முன்னிட்டு அகிலாண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களை செய்து சந்தனகாப்பு அலங்காரம் செய்து வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனைகளும் நடந்தது.
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள செல்லியம்மன் ஆலயத்தில் செல்லியம்மனுக்கும் சந்தனகாப்பு அலங்காரங்களும் பழங்களால் சிறப்பு அலங்காரங்களை செய்து மகாதீபாராதனைகளும் நடந்தது இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமிதரிசனம் செய்தனர்.
-பவானி கார்த்திக்