ஆதவ் அர்ஜுனன் வீட்டில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை..!
தொழில் அதிபர் மார்ட்டின் ஆதவ் அர்ஜுனன் வீட்டில் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
சட்டவிரோத பணப்பரிமாற்றம், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு தொடர்பாக அமலாக்கத்துறை அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் லாட்டரி தொழில் அதிபர் மார்ட்டின் மற்றும் அவரது மருமகன் ஆதம் அர்ஜுனன் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முதற்கட்ட சோதனையை மேற்கொண்டனர்.. இதன் தொடர்ச்சியாக இன்று கோவை துடியலூர் வெள்ளக்கிணறு பகுதியில் லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோல் லாட்டரி மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜுனவிற்கு சொந்தமான சென்னை தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள அவரது இல்லத்திலும் மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் கோவையில் உள்ள மார்ட்டினின் வீடு மற்றும் அலுவலகங்களில் தொடர்ந்து 4 நாட்கள் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..