வாங்கிய கடனை திருப்பி தராதவரை பரியேறும் பெருமாள் பட பாணியில் அரைநிர்வணமாக ஓட விட்டு சித்ரவதை செய்ததில், இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகே அரச மங்கலத்தை சேர்ந்த மூதாட்டி வளர்மதி, தனது இளைய மகனை பறிகொடுத்த விரக்தியில், மூத்த மகன் மற்றும் உறவினர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுக்க வந்தார்.
அங்கு விழுப்புரம் மாவட்டம் சேர்ந்தனூர் கிராம ஊராட்சி மன்ற துணைத் தலைவரும், பாமக நிர்வாகியுமான குமரவேலுவின் மீது அவர் தொடுத்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
வளர்மதியின் இளைய மகனான சந்துரு, சேர்ந்தனூர் கிராம பாமக ஊராட்சி மன்ற துணைத் தலைவரான குமரவேலிடம் சீட்டுகட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இதில், சந்துருவிற்கு 95 ஆயிரம் ரூபாய் வரை கடன் ஏற்படவே, அதற்கு வட்டியும், முதலுமாக சேர்த்து ஒன்றே முக்கால் லட்ச ரூபாயை குமரவேல் திருப்பி கேட்டுள்ளார்.
இதில், 32 ஆயிரம் ரூபாய் மட்டுமே திருப்பி கொடுத்த சந்துரு, மீதி பணத்தை விரைவில் தருவதாக கூறவே, இதை ஏற்க மறுத்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது தரப்பினர், சந்துருவை சரமாரியாக தாக்கியும், அரை நிர்வாணமாக்கியும் சாலையில் ஓட விட்டதாக கூறப்படுகிறது.
Discussion about this post