சகோதரனையே திருமணம் செய்யும் இளைஞர்..! காத்திருந்த ட்விஸ்ட்..!!
சினிமாவில் மட்டும் தான் வழக்கத்திற்கு மாறான நிகழ்வுகள் நடக்கும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், ஒருசிலரின் வாழ்க்கையில், சினிமாவை காட்டிலும் வழக்கத்திற்கு மாறான சில நிகழ்வுகள், அவ்வப்போது நடந்து வருகின்றது. அந்த வகையில் இணையதளவாசி ஒருவர் சமூக வளைதளத்தில் அப்படியான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
சகோதரனையே திருமணம் செய்யும்
ஓரிணச்சேர்க்கையாளர் :
28 வயதான ஓரிணச்சேர்க்கையாளர், அதே வயதுடைய இளைஞரை காதலித்து வந்த நிலையில் இருவரும் சில மாதங்களில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, ancestry என்ற வலைதளத்தில், DNA Kit ஒன்றை வாங்கி, பரிசோதனை செய்துள்ளனர்.
அதிர்ச்சி அடைந்த ஜோடிகள் :
அந்த பரிசோதனையின் முடிவில், தன்னுடைய காதலன், தனக்கு மரபுவழி சகோதரன் என்று தெரியவந்துள்ளது.
இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர், தனது சோகத்தை, Reddit என்ற சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
– பவானி கார்த்திக்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..