மது போதையில் ஆட்டோவில் ஏறிய இளம்பெண்.. ஓட்டுநரால் நடந்த விபரீதம்..
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் கோரமங்கலாவில் உள்ள பஃப் ஒன்றிற்கு சென்ற இளம் பெண் ஒருவர் அதிக மது அருந்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் ஓட்டிவந்த இரு சக்கர வாகனம் விபத்து ஏற்பட்டதால் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு ஆட்டோவில் ஏறியுள்ளார்.
இளம்பெண் அதிக மது போதையில் இருப்பதை அறிந்துகொண்ட ஆட்டோ டிரைவர் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயன்றுள்ளான். அதனால் ஆட்கள் இல்லாத இடமாக ஆட்டோவை ஓட்டி சென்று இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
அரை மயக்கத்தில் இருந்த அந்த இளம்பெண், தனது தோழிக்கு நடந்தவற்றை கூறியுள்ளார். இதையடுத்து இளம்பெண் உடனடியாக மீட்கப்பட்டு ஹெப்பகோடியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வரும் பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை உறுதி செய்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் மருத்துவமனைக்கு விரைந்த போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தையை உலுக்கி உள்ளது. தற்போது பெங்களூரில் இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”