கோவிலில் தூய்மை ஈடுப்பட்ட பணியாளர்.. 10 அடி உயரத்தில் கீழே விழுந்த சோகம்..!
சென்னை கொட்டிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் பழனி (44). இவர் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் கோபுரத்தில் சுத்தம் செய்யும் பணியும் ஈடுப்பட்டு வந்தார். அப்போது 40 அடி உயர கோபுரத்தில் ஏற முயன்று 10 அடி ஏறும்போது எதிர்பாரதவிதமாக தவறி கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்த திருவான்மியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனியின் உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்