கிரெடிட் கார்டை மூலம் பண மோசடி செய்த ஆசாமி..?
கிரெடிட் கார்டை செயலிழக்க வைப்பதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ஓடிபி எண்ணை பெற்று அவரது வங்கி கணக்கில் இருந்து 1.25 லட்சம் செய்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்…
புழல் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கிருபாகரன் என்பவரின் செல்போன் எண்ணிற்கு சமீபத்தில் ஒரு குருஞ்செய்தி வந்துள்ளது..
அதில் பேசிய நபர் வங்கியில் இருந்து பேசுகிறேன்.., நீங்கள் வாங்கிய கிரெடிட் கார்டை ஏன் ஆக்டிவேட் செய்யாம இருக்கீங்க என கேட்க.
அதற்கு கிருபாகரன் எனக்கு கிரெடிட் கார்ட் தேவையில்லை .., அதி டிஆகட்டிவேட் செய்ய வேண்டுமென கூறியுள்ளார்.
அதற்கு அந்த ஆசாமி, கிரெடிட் கார்டை டிஆக்டிவேட் செய்ய வேண்டுமென்றால் உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒரு ஓடிபி வரும் அதை சொன்னால் போதுமென சொல்ல.
கிருபாகரனும் ஓடிபி எண்ணை ஷேர் செய்துள்ளார்.
ஓடிபி சொல்லிய ஐந்து நிமிடத்தில் பிரபாகரன் வங்கி கணக்கில் இருந்து ₹1,25,075 ரூபாய் பணம் எடுக்கப்பட்டு இருப்பதாக மெசேஜ் வந்துள்ளது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரபாகரன் புழல் காவல் நிலையத்தில் ஆன்லைன் மோசடி கும்பல் பற்றி புகார் அளித்துள்ளார்.
புகாரை ஏற்ற போலீசார்.., மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.., மேலும் இது போன்ற மோசடி கும்பலை நம்ப வேண்டாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..