எந்த மாநிலத்திலும் இல்லாத சிறப்பு திட்டம்…!! முதலமைச்சர் ஸ்டாலின்-க்கு நூற்பாலை சங்கத்தினர் நன்றி..!!
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வரலாறு காணாத சிறப்பு திட்டத்தை அறிவித்த தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்..
நூற்பாலைகளை நவீனப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றி தரக்கோரி நூற்பாலை சங்கத்தினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.. இன்று அக்கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது..
இந்நிலையில் இன்று, தமிழ்நாடு முதல்வர் அவர்களை சந்தித்து நூற்பாலை சங்கத்தினர், சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்கள், ஜவுளித்துறை இந்திய அளவில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது. 45 % மேல் தமிழ்நாட்டில் தான் நூற்பாலைகள் உள்ளன.
15 ஆண்டிற்கு மேலாக உள்ள கருவிகளை நவீனப்படுத்த வரலாறு காணாத திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது அதன்படி, 15 ஆண்டுக்கு மேலுள்ள நூற்பாலைகளை மேம்படுத்த வங்கியில் பெறும் வட்டியில் 6% வட்டியினை நூற்பாலை நிறுவனங்களுக்காக அரசே ஏற்றுக்கொண்டு வழங்கவுள்ளது தமிழ்நாடு அரசு இந்திய அளவில் இது போன்றதொரு திட்டம் வேறெங்கும் இல்லை,
இதற்காக 50கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பாரம்பரியமாக தமிழகத்தில் 54 சதவீதம் உற்பத்தி பஞ்சு பின்னலாடைகள் விசைத்தறிகள் ஆயத்த ஆடைகள் உற்பத்தி செய்கிறோம். நூற்பாலைகளை நவீனப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை வைத்தோம். அதனை ஏற்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது..
இவ்வாறு நவீனப்படுத்துவதால் மற்ற மாநிலங்களுக்கு இணையாக தமிழ்நாடு விளங்கும். தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கும் துறையின் அமைச்சர் அவர்களுக்கும் நன்றி.. ஜவுளித்தொழிலுக்கு இது மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும் புத்தாக்கம் பெறும் என தெரிவித்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..