நீதிக்காக போராடும் தொடர் விவசாயிகள் போராட்டம்..!
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஒன்றிய அரசை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநிலம் தழுவி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் அகில இந்திய விவசாயி தொழிலாளர்கள் சங்கத்தின் ஒன்றிய தலைவர்கள் கருணாநிதி, பாலகிருஷ்ணன் ஆகியோரின் தலைமையில் மத்திய அரசை கண்டித்து செம்பனார்கோவில் மேலமுக்கூட்டில் இருந்து பேரணியாக செங்கொடி ஏந்தி கீழ முக்கூட்டு வழியாக செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வந்தடைந்தனர்.
தொடர்ந்து 100 நாள் வேலையை முழுமையாக அமல்படுத்தவேண்டும், 100 நாள் வேலை சம்பள பாக்கிகளை உடனே வழங்கிட வேண்டும், புதிய வேலைக்காண அட்டைகளை வழங்க வேண்டும்.
100 நாள் வேலையை 200 நாளாகவும், தினக்கூலியை 600 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க வேண்டும், பேரூராட்சி மக்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட வாசகங்களை முன்வைத்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஸ்டாலின், மாவட்ட தலைவர் காபிரியல், மாவட்ட துணைத் தலைவர் சரவணன், தரங்கை ஒன்றிய செயலாளர் தமிழ்வாசகம், மாவட்ட குழு உறுப்பினர் செல்வபாக்கியவதி ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கை விளக்கவுரை ஆற்றினர். போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..