சென்னை கானத்தூரில் தனியார் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சென்னை கானத்தூரில் இயங்கி வரும் தனியார் கடல்சார் பல்கலைக்கழகத்தில்
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22-வயதான பிரசாந்த் என்ற மாணவன் கல்லூரி தங்கும் விடுதியில் தங்கி படித்து வந்த பிரசாந்த் இன்று அதிகாலை, இரத்த வாந்தி எடுத்ததாக சக மாணவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் மாணவர் பிரசாந்த் ரத்த வாந்தி எடுத்து இறந்தது எப்படி என்பது தெரியவில்லை. அவரது இறப்பை தாங்க முடியாத சக கல்லூரி மாணவர்கள் நியாயம் கேட்டு கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் டூட்டி ஆபிசர் புருஷோத்தமன் என்பவர், உடல் நிலை பாதிக்கப்பட்ட மாணவர் பிரசாந்த்துக்கு ஓய்வு கொடுக்காததால் உயிரிழந்ததாக குற்றம்சாட்டினர். எங்கு நீதி வேண்டும் என்ற கோஷங்களுடன் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தனியார் கல்லூரியின் எதிரே இன்று அதிகாலை அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த கிழக்கு கடற்கரை சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு நிலவியது.
இதையடுத்து விரைந்து வந்த போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.இந்த சம்பவத்தால் கிழக்கு கடற்கரை சாலை பகுதியே ஸ்தம்பித்து போனது. இந்நிலையில் 3 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ள கல்லூரி நிர்வாகம், புருஷோத்தமனை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.