ஏ. ஆர். ரகுமானிடம் விசாரணை நடத்த சங்கர் ஜிவால் உத்தரவு..!!
ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக புகார் எழுந்ததையடுத்து, இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை கிழக்கு சாலையில் உள்ள பனையூர் அருகே ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக வெள்ளி, தங்கம், வைரம், பிளாட்டினம் என 2 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை டிக்கெட் பதிவு நடைபெற்றது.
நிகழ்ச்சியின்போது சரியான பார்க்கிங் வசதி இல்லை என்றும், 5 ஆயிரம் மதிப்புள்ள டிக்கெட் வைத்திருந்த ரசிகர்கள் பலருக்கு இருக்கைகள் கிடைக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.
கூட்டத்திற்குள் சிக்கி வெளியே வர முடியாமல் பலரும் திணறியதாகவும் ரசிகர்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு குற்றம்சாட்டி வருகின்றனர்.
சமூக வலைதளங்கள் கடும் கண்டனம் எழுந்த நிலையில் இதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனமான ஏசிடிசி ஈவண்ட் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.
மேலும், அதிகமான மக்கள் கூடியதால் ஏற்பட்ட நெரிசலின் காரணமாக கலந்து கொள்ள இயலாத ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இதற்கு பதிலளிக்கும் விதமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், இசை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதவர்கள் தங்களது டிக்கெட்டின் நகலையும் உங்களது கருத்துக்களையும் மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுகொண்டார்.
இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சி குளறுபடி தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க தாம்பரம் காவல் ஆணையருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனத்திடம் விசாரணை நடத்தவும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
Discussion about this post