வத்தலகுண்டு மஹாலக்ஷ்மி அம்மன் கோவிலில் தலையில் தேங்காய் உடைத்து புதுவித வழிபாடு..!!
திருவிழா என்றாலே பக்தர்கள் தீச்சட்டி, முளைப்பாரி, பால்குடம், வேல் குற்றுவது போன்ற நேர்த்திக்கடன்கள் செய்வது வழக்கம். ஆனால் இந்த கோவிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகேயுள்ள மகாலட்சுமி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. வத்தலகுண்டு மல்லணம் பட்டி ஊராட்சியில் நூறாண்டுகளாக பிரசித்தி பெற்ற அருள்மிகு மஹாலட்சுமி அம்மன் கோவில் அமைந்துள்ளதுள்ளது.
ஆண்டு தோறும் ஆடிமாதம் தொடங்கியதும் மூன்று நாட்கள் மட்டும் மிகவும் விசேஷமான நாள் பெண்களில் முளைப்பாரி ஏந்தி வெடி மற்றும் மேள தாளத்துடன் அம்மனின் கரகம் எடுத்து வரப்படும்.
கரகம் கோவிலை சேர்ந்த பின் சில பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் பரிகாரம் தொடங்கியது.., அதை சாமி வந்து ஆடிய பெண்கள் இதை செய்தனர்.
அதில் 15க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.., அவர்கள் அனைவருக்கும் பூசாரி பூஜைகள் செய்து விழாவை தொடங்கி வைத்தார். பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்த பின்னரே பூஜையும், திருவிழாவும் நிறைவு பெருமாம். இதை காண திண்டுக்கல் மட்டுமின்றி பல ஊர்களில் இருந்தும் வந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..