தவெக தலைவர் விஜய் தொடங்கியுள்ள புதிய சேனல்..!! பெயர் அறிவிப்பு..!!
கடந்த பிப்ரவரி 2ம் தேதி 2024ம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்தார்.. கட்சியை அறிவித்த பின்னர் மார்ச் 11ம் தேதி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான அறிக்கை,
அதன் பின்னர் ஆகஸ்ட் மாதம் கட்சி கொடியும் செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் கட்சி பாடலும் வெளியானது..
அதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ம் தேதி முதல் மாநில மாநாடு நடைபெற்றது..
அம்மாநாட்டில் தவெகவின் 20 கொள்கைகளை அறிவித்தனர்… தவெகவின் முதல் மாநில மாநாட்டில் தலைவர் விஜய் பேசியதற்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் தங்களுடைய விமர்சனங்களை முன் வைத்தனர்..
அதன் பின்னர் நேற்று காலை பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
அந்த செயற்குழு கூட்டத்தில் 20க்கும் மேற்பட்ட தீர்மானங்களை வெளியிட்டனர்..
அதாவது நிர்வாகச் சீர் திருத்தம்., சமூகநீதி, மொழிக்கொள்கை, கல்வி, மருத்துவம், விவசாயம், சுற்று சூழல் பாதுகாப்பு என 28 தீர்மானங்களை நேற்று வெளியிட்டனர்..
அதனை தொடர்ந்து இன்று தவெக தலைவர் விஜய் தொடங்கவுள்ள புதிய தொலைக்காட்சியின் சேனல் மற்றும் அதன் பெயரை அவர் வெளியிட்டுள்ளார்..
அதாவது “தமிழ் ஒளி” என்ற புதிய சேனைலின் பெயரை அக்கட்சி தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..