ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய திருமணமான நபர்.. கர்ப்பமான இளம்பெண்..!
தூத்துக்குடி மாவட்டம் மந்திதோப்பு பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளார். இந்த கடன் தொகையை, மாதந்தோறும் பெறுவதற்காக, பஜாஜ் நிறுவனத்தில் பணியாற்றும் அகஸ்டின் என்பவர், அவரது வீட்டிற்கு வந்துள்ளார்.
இவ்வாறு மாதந்தோறும் வீட்டிற்கு வந்தபோது, அகஸ்டினுக்கும், கடனை வாங்கிய நபரின் மகளுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து, தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில், அந்த பெண், கர்ப்பம் அடைந்ததால், தன்னை திருமணம் செய்துக் கொள்ளுமாறு, அகஸ்டனிடம் கேட்டுள்ளார். இதற்கு, எனக்கு ஏற்கனவே திருமணமாகி, 5 வயதில் குழந்தை உள்ளது.
எனவே, நீ கருவை கலைத்துவிடு என்று அகஸ்டின் கூறியுள்ளார். கருவை கலைக்க மாட்டேன் என்று கூறினால், உனது அந்தரங்க புகைப்படங்களை, சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண், ஒரு கட்டத்திற்கு மேல், தனது பெற்றோரிடம், இதுகுறித்து தெரிவித்துள்ளார். இதனை அறிந்த அவர்கள், காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரை பெற்ற காவல்துறையினர், அகஸ்டினை கைது செய்து, விசாரணை நடத்தினர்.
அதில், அந்த ஒரு பெண் மட்டுமின்றி, பல்வேறு பெண்களை அவர் ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அகஸ்டினை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.
-பவானி கார்த்திக்