வீண் சண்டையால் பரிதாபமாக பிரிந்த உயிர்..!! குவிந்த போலீஸ்..!! பரபரப்பான வாணியம்பாடி..!!
வாணியம்பாடியில் நடைபெற்ற கோவில் திருவிழாவின் போது இளைஞர்கள் இடையில் ஏற்பட்ட மோதலில் அப்பு என்ற சந்துரு கத்தியால் குத்தி கொலை. பாதிக்கப்பட்ட உறவினர் மற்றும் பகுதி மக்கள் கோணாமேடு பகுதியில் புகுந்து சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், டாட்டா ஏசி வாகனம், ஆட்டோக்கள் மற்றும் வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் அடித்து சேதம். சம்பவத்தை தொடர்ந்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காமராஜபுரம் பகுதியை சேர்ந்த அப்பு என்கின்ற சந்துரு என்ற இளைஞர் திருவிழாவில் மேளம் வாத்தியம் வாசிப்பது தொடர்பாக வாணியம்பாடி கோனாமேடு வி.எஸ் காலனி பகுதியையை சேர்ந்த இளைஞர்களுடன் ஏற்பட்ட தகறாரு காரணமாக ஏற்பட்ட மோதலில் ஆசிரியர் நகர் பகுதியில் திருவிழா மேளம் வாசித்து கொண்டு இருக்கும் போது இரு தரப்பினர் இடைய ஏற்பட்ட மோதலில் சந்துரு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த உயிரிழந்த வாலிபர் சந்துருவின் உறவினர்கள் கோணாமேடு பகுதியில் உள்ள வீடுகள் மீது கல்வீசி தாக்குதல் நடுத்தினர். மேலும் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி லாரி, ஆட்டோ இருசக்கர வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தி அடித்து உடைத்தனர்.
இதில் 20க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் ஆட்டோ மற்றும் மினி லாரி உள்ளிட்ட வாகனங்கள் சேதம் அடைந்துள்ளது. இதனால் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், மற்றும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோணாமேடு அம்பேத்கர் சிலை முன்பாக பாதிக்கப்பட்டவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா தலைமையிலான காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு பகுதியை சேர்ந்த மக்களிடையே மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட இளைஞரின் உறவினர்கள் மற்றும் பகுதி மக்கள் கச்சேரி சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலை முன்பாக குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.