திருப்பூர் மக்களுக்கு ஒரு குட்நியுஸ்.. இனி வாரந்தோறும்..?
திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக நடைபெற்ற ஹேப்பிசண்டே நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர், ஆணையார் உள்ளிட்டோர் நடனமாடி உற்சாகப்படுத்தினர்..
திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மகிழ்ச்சியான ஞாயிறு எனப்படும். ஹேப்பி சண்டே நிகழ்ச்சி தொடர்ந்து மூன்றாவது மாதமாக இன்று திருப்பூர் யூனியன் மில்சாலை முதல் கேபிஎன் காலனி வரை நடைபெற்றது.
5 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்ற இந்த ஹாப்பி சண்டே நிகழ்வில் 80க்கும் மேற்பட்ட பொழுது போக்கு அம்சங்கள் இடம்பெற்றன. இளைஞர்களுக்கான டிஜே நடனம், குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், சிலம்பம், பரதம், கராத்தே, உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்நிகழ்ச்சியை துவக்கிவைத்த மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தொடர்ந்து மாதம் தோறும் இந்நிகழ்வு நடைபெறும் எனவும் மக்களின் ஆர்வம் மற்றும் உற்சாகத்தை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் மகிழ்ச்சியான ஞாயிறு நிகழ்வின் ஒரு பகுதியாக டிசம்பர் 31ம் தேதி இரவு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் மிகப்பெரும் மகிழ்ச்சி ஏற்பாடு செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் பவன்குமார் , மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் திரைப்படப் பாடலுக்கு நடனமாடி உற்சாகப்படுத்தினர். தொடர்ந்து சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை பார்வையிட்ட மேயர் தினேஷ்குமார் அவர்களோடு விளையாடி சிறுவர்களையும் உற்சாகப்படுத்தினார்.
கடந்த மாதங்களை விட இந்த மாதம் பொதுமக்களின் கூட்டம் அதிகளவு இருந்த தன் காரணமாக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் பெண்களுக்காக தனிமேடை அமைக்கப்பட்டு டிஜே நடனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..