கைத்தறி நெசவாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்..!
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நிதி திரட்டும் பட்டிமன்றம் சாலமன் பாப்பையா தலைமையில் வரும் 22 ஆம் தேதி கலைஞர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. இது குறித்தான செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த கைத்தறி நெசவு ஆடை நிறுவனர் சண்முகம்
அப்பொழுது அவர் பேசுகையில் மெட்ராஸ் பல்லவன் ரோட்டரி சங்கம் பல்வேறு உதவிகளை செய்து வருவதாகவும் தற்போது வரை பத்திருக்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் கட்டியிருப்பதாகவும், அதைத்தொடர்ந்து நெசவாளர்கள் வாழ்வின் மேம்படுத்துவதற்காக சிறப்பு பட்டிமன்றம் மூலம் அதில் வரும் வருமானத்தை தமிழகம் முழுவதும் ஏழ்மையில் சிக்கித் தவிக்கும் நெசவாளன் குடும்பத்திற்கு வழங்க உள்ளதாக அவர் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில் தமிழ்நாட்டில் நெசவு தொழில் மிகவும் பின் தங்கிய இருப்பதாகவும் 1970 காலகட்டத்தில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகித்த நெசவுத் தொழிலை அரசு கண்டுகொள்ளவில்லை ஆகையால் தான் இந்த தொழில் வெளியில் தெரியாத அளவிற்கு உள்ளதாகவும்
கைத்தறி நெசவு தொழில் பற்றி போதிய அளவு இன்றைய தலைமுறைக்கு விழிப்புணர்வு இல்லாத நிலையில் இருப்பதாகவும் அதனை விழிப்புணர்வு கொண்டு வருவதற்கு தான் இந்த சிறப்பு பட்டிமன்றத்தை ஏற்பாடு செய்திருப்பதாகவும் இந்த பட்டிமன்றத்தின் மூலம் கிடைக்கும் வருவாயினை நெசவாளர் குடும்பத்தில் தேவைப்படும் கல்வி மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைச் செலவுக்கு வழங்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .
இது இலவசமாக வழங்கப்படவில்லை அவர்களின் ஊக்கப்படுத்த ஊக்க தொகையாக வழங்க உள்ளோம், விவசாயத்திற்கு தனி நிதிநிலை அறிக்கை இருப்பது போன்று ஏன் நெசவாளர்களுக்கு தனி நிதிநிலை அறிக்கை கொண்டு வரவில்லை என அவர் கேள்வி எழுப்பி உள்ளார் .
தொடர்ந்து பேசிய அவர் வாரம் இருமுறை அனைவரும் கதர் ஆடையை உடுத்த வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது ஆனால் தற்போது வரை அந்த அறிவிப்பு சட்டமாக இயற்றவில்லை.
தற்சார்பு தொழிலைப் பற்றி பேசுகிறார்கள் நெசவுத்தொழில் தற்சார்பு தொழில் தானே அதனை முன்னேற்ற வழி வகை செய்யவில்லையே வெளிநாடுகளில் நெசவுத் தொழிலை பற்றி பேசுகிறார்கள் ஆனால் உள்நாட்டில் இதனை பற்றி பேசவே இல்லையே என அவர் மன வேதனையை வெளிப்படுத்தினார் .
பாலமுருகன் பேட்டி :
நெசவுத்தொழில் தற்போது அழிவில் விளிம்பில் இருப்பதாகவும் குன்றத்தூர் பகுதியில் 1500 நெசவாளர்கள் இத்தொழில் மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது 150 பேர் மட்டுமே இந்த தொழில் மேற்கொண்டு வருவதாகவும் , நான்கு பேர் ஒரு குடும்பத்தில் இந்த தொழிலை மேற்கொண்டாலும் அடிப்படை செலவைக்கே போதுமான அளவில் இல்லை இத்தொழிலை முன்னேற்ற தனியார் பங்களிப்புதோடு மட்டுமின்றி அரசும் தேவையான உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.
தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..! இடியமின் சொன்ன இடி அப்டேட்..!
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..