மதுவால் நண்பரையே மர்டர் செய்த சக நண்பர்..!
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே மது விருந்தின் போது மதுவை தட்டி விட்டு தகராறில் நண்பரை குளத்தில் மூழ்க அடித்து கொலை செய்த சக நண்பர்.
திருவனந்தபுரம் அடுத்துள்ள கல்லம்பலத்தை சேர்ந்த ராஜு என்ற 38 வயது நபர் மாவின் மூடு என்ற குளம் அருகே பிணமாக மிதந்து கொண்டு இருப்பதாக.., போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலின் பெயரில் அங்கு வந்த போலீசார். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதில் ராஜு மூச்சடைத்து இறந்து போனது தெரிய வந்துள்ளது.., மேலும் மது குடித்து இருப்பதாகவும்.., மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மது போதையில் தண்ணீரில் விழுந்து இறந்தாரா அல்லது.., யாராவது கொலை செய்து இருப்பார்கள் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை தொடங்கி உள்ளனர்..,
ராஜு நண்பர் சுனிலிடம் விசாரணை மேற்கொண்ட போதே உண்மை தெரியவந்தது. இருவரும் மது குடித்து கொண்டு இருக்கும் பொழுது.., ராஜு, சுனிலின் மதுவை தட்டி விட்டதாகவும்.., அதற்கு கேள்வி கேட்ட பொழுது ராஜு சுனிலை கெட்ட வார்த்தைகளால் பேசி யாதல்.., ஆத்திரமடைந்த சுனில், ராஜூவை தண்ணீரில் மூழ்கி கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
நண்பரை கொலை செய்ததின் பெயரில், வழக்கு பதிவு செய்து ராஜூவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..