ADVERTISEMENT
அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் குழந்தையுடன் பெற்றோர்கள் சாலை மறியல்!!
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் குழந்தையுடன் சிகிச்சைக்காக வந்த பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
களம்பூர் பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர்- ராதிகா தம்பதியர் தனது நான்கு வயது குழந்தை மண்ணெண்ணையை குடித்துவிட்டதாக கூறி அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்.
அங்கு சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக மருத்துவர் இல்லாத நிலையில், செவிலியரும் அலட்சியமாக பேசியதால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் குழந்தையுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
