மது குடிப்பதில் ஏற்பட்ட தகராறு.. நண்பர்களே தள்ளி விட்டு கொலை செய்த சம்பவம்..!
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உலாஸ் நகரை சேர்ந்த கார்த்திக் என்பவர் கடந்த 27ஆம் தேதி தனது 23 வது பிறந்த நாளை தனது நண்பர்களான தீரஜ் யாதவ், நிலேஷ் ஷிர்சாகர் (23) மற்றும் சாகர் காலே ஆகியோருடன் கொண்டாடியுள்ளார்.
நிலேஷ் என்ற நண்பரின் வீட்டின் நான்காவது மாடியில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்துள்ளது. அப்போது மது பற்றாக் குறையால் நண்பர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது சக நண்பர்கள் சேர்ந்து தள்ளிவிட்டதில் கார்த்திக் நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் பயந்து போய் ஓடி வந்து பார்த்தபோது கார்த்திக் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து விட்டல்வாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கார்த்திகை தாங்களாகவே கீழே தள்ளிவிட்டதாக நண்பர்கள் கூறியுள்ளனர்.
மேலும் மது பற்றாக்குறையால் ஏற்பட்ட தகராறில் கார்த்திக் நிலேஷை மது பாட்டிலால் அடித்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நண்பர்கள் கார்த்திகை மாடியில் இருந்து தள்ளிவிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கார்த்திக் நண்பர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்