இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து..!
வேலூர் சின்ன அல்லாபுரம் சேர்ந்தவர் விஜயகுமார் (49)கட்டிட மேஸ்திரி. இரவு கே வி குப்பம் அருகே உள்ள சின்ன வடுவன் தாங்களில் உள்ள மாமியார் வீடுக்கு சென்று விட்டு பைக்கில் மனைவி தமிழ்ச்செல்வியுடன் வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது வடுகந்தாங்கலில் 3 பேர் குடிபோதையில் காரில் வந்தவர்கள் பைக்கின் மீது மோதினர் அதில் விஜயகுமார் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் பலியானார்.
தமிழ்ச்செல்வி பலத்த காயங்களுடன் கத்தி போராடிய நிலையில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் காப்பாற்றி ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்த கே வி குப்பம் போலீசார் விஜயகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் காரில் வந்தவர்கள் மூன்று பேர் இவர்களை இடித்து கார் ரோடின் நடுவே உள்ள தடுப்பு சுற்றில் இடித்து கார் கவிழ்ந்துள்ளது.
காரில் வந்தவர்கள் மூன்று பேரும் அப்பகுதியில் உள்ள சின்ன வடுகந்தாங்களை சேர்ந்த 1,ஜெகதீசன் 2,.நடராஜன் 3.சத்யராஜ்.ஆகியோர் என அப்பகுதி மக்கள் கூறவே பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் கே வி குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திலிருந்து காரை மீட்டு தப்பி ஓடி தலைமறைவாக உள்ள மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்